tamilkurinji logo


 

சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் ,
சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்

First Published : Monday , 17th June 2013 08:07:16 PM
Last Updated : Monday , 17th June 2013 08:07:16 PM


சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்
,

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தான் A Class பிரீமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டு கார் ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.

சொகுசு ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் இதுவே முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமின்றி சொகுசுக்கார் வரிசையில் எரிபொருள் சிக்கனத்துடன் நிறைவான மைலேஜ் கொடுக்கும் கார் இதுவென்பதும் விசேஷச் செய்தியாகும்.

இப்புதிய A Class சிறப்பான இரண்டு வேரியன்ட்டில், பெட்ரோல் மற்றும் டீசலில், 7 ஸ்பீட் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்சுடன் வியக்க வைக்கும் செயல்திறனுடன் விளங்குகிறது.

மிகவும் வித்தியாசமான, பார்ப்போர் கண்களை கவரும் வண்ணம், அழகான வளைவு நெளிவுகளுடனான, இதுவரை பார்த்திராத வடிவமைப்புடன் இதன் வெளிப்புறத்தோற்றம் திகழ்கிறது.

மிகவும் ஆச்சரியப்படவைக்கும் சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இக்காரில் காண முடிவதால் இதன் அறிமுகம் வாடிக்கையாளரின் கவனத்தை பெரிதும் கவரும் என்பதும் நிச்சயம்.

வழக்கமான ஹேட்ச்பேக் கார் வடிவங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு, புத்துணர்ச்சியூட்டும் வகையில் இதன் வெளிப்புற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்த பொறியாளர் குழுவிற்கு "டீம் ஆஃப்தி இயர்' விருது 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கேற்றபடி கம்பீரமான ஆளுமையை பிரதிபலிக்கும் இதன் முன்புறம் மற்றும் பக்கவாட்டு தோற்றம் இருக்கிறது. டைமன்ட் வடிவ குழிவுகளை இருபக்கமும் கொண்ட ரேடியேட்டர் க்ரில், ஆங்காங்கு தென்படும் க்ரோம் ஃபினிஷ் எடுப்பான பென்ஸ் லோகோ, நீண்ட நளினமான ஹெட்லைட் க்ளஸ்டர் பின்புற டெயில் லேம்ப் பக்கவாட்டில் மெல்ல எட்டிப்பார்ப்பது,

ஆழமான வளைவுகள் கொண்ட கதவுகள் என்று மிகவும் அழகான கவர்ச்சியான வடிவமைப்புடன் திகழ்கிறது. இந்த A க்ளாஸ் இதன் A 180 ஸ்போர்ட் பெட்ரோல் வெர்ஷனில் தள்ளித்திறக்கக்கூடிய "சன் ரூப்' மேற்கூரையில் இருப்பதும் கவர்ச்சியாக இளைய தலைமுறையை கவரும் வகையில் உள்ளது.

இதன் 7GDCT ஸ்பீட் ட்யூவல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் வேகமான ஸ்போர்டியான பயணமோ அல்லது நிதானமான ரிலாக்ஸான பயணமோ எதுவாகிலும் கியர் மாறுவதே தெரியாத வண்ணம் சுகமான ஓட்டும் அனுபவத்தையும் பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

இதன் உட்புற அமைப்பு ஒவ்வொரு முறை வண்டியில் ஏறும்போதும் புதுமையாக உணரும் படியாக உள்ளது. டேஷ்போர்ட்டின் வடிவமைப்பு, சீட்களின் கண்ணியமான நிறம் மற்றும் வடிவம், முன்புற வரிசையின் நேர்த்தியான இடவசதி, ஒரு சில விநாடி வண்டி முழுவதும் சீராக பரவும் ஏசி வசதி, வெளிப்புற கார் வடிவமைப்பிற்கு பொருத்தமான நளினமான தாராள இடவசதி கொண்ட பின்புற வரிசை என்று இதன் உட்புறத்தை வர்ணிக்க ஆடம்பரம் வசீகரம் போன்ற வார்த்தைகளே தரும்.

இதன் பொருட்கள் வைக்கும் பகுதி 340 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. விலையுயர்ந்த ஆர்டிகோ திரைச்சீலை, துல்லியமான ஒலியமைப்பு கொண்ட 800X480 ஆடியோ 20CD சிஸ்டம் ஸ்டியரிங் வீலில் பொருத்தப்பட்டு இயக்கக்கூடிய ஆடியோ சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் வயர்லெஸ் மூலம் சிறப்பாக இயங்குவது, 14.7செமீ கலர் டிஸ்ப்ளே, ஐ-ஃபோன் இணக்கம் கொண்ட யுஎஸ்பி, AUXCன், ப்ளூடூத், ஆடியோ ஸ்டீரிமில் கொண்ட இன்ஃபோடைன்மென்ட் போன்றவை பென்ஸ் A க்ளாஸ் பயணத்தை மிகவும் ரசிக்கக் கூடிய உன்னதமான அனுபவமாகவே மாற்றுகிறது.

அதிகபட்ச வேகத்திலும் காருக்குள் எந்தவித சிறு ஒலியும் அதிர்வும் இன்றி வெளியுலகு தொடர்பு முழுவதுமாய் துண்டிக்கப்பட்ட உணர்வு கிடைக்கிறது.

இதன் டைரக்ட் இன்ஜெக்ஷன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் சிறப்பான சக்தியையும் இழுப்பு விசையையும் கொண்டு குறைந்த வேகத்திலும் துரிதமான அசைவை கொடுக்கிறது.

இதன் நான்காம் தலைமுறை காமன் ரெயில் டீசல் டெக்னாலஜி மேம்படுத்தப்பட்ட இக்னீஷன் அழுத்தம் மற்றும் குறைந்த வேகத்திலும் அதிக டார்க்கை வழங்குகிறது. இதிலுள்ள ECO ஸ்டார்ட், ஸ்டாப் செயல்பாடு மிகவும் சிக்கனமான காராக அ கிளாஸ் திகழ்கிறது.

இதன் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிக அழுத்த டைரக்ட் இன்ஜெக்ஷன் மூலம் மிக சிறப்பான செயல்திறனும் எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. இதிலும் ECO ஸ்டார்ட் ஸ்டாப் செயல்பாடு உள்ளதால் போக்குவரத்தில் என்ஜின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

ஓட்டுனரின் ஓட்டும் போக்கை கணித்து எச்சரிக்கும் மற்றும் அறிவுறுத்தும் ECO டிஸ்ப்ளே இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

பென்ஸ் A க்ளாசில் இந்நிறுவனத்திற்கே உரித்தான பாதுகாப்பான ஓட்டும் முறைக்காகவும், ஆபத்து நேர உதவிக்கெனவும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பலவித எலக்ட்ரானிக் அசிஸ்ட் சிஸ்டம்கள் இதில் உள்ளதால் எம்மாதிரி சூழலையும் பாதுகாப்பாக கையாளும் நம்பிக்கை ஓட்டுனருக்கு ஏற்படுகிறது.

ஏழு ஏர்பேக்கள், ஆக்சிலரேஷன் ஸ்கிட் கண்ட்ரோல், அடாப்டீவ் ப்ரேக் லைட்கள், எலக்ட்ரிக் பார்கிங் ப்ரேக், டயர் ப்ரஷர் லாஸ் வார்னிங் போன்றவற்றுடன் ஏபிஎஸ், ப்ரேக்கிங் சிஸ்டம் இஎஸ்பியுடன் சேர்ந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

அதிநவீன அழகிய நேர்த்தியான வடிவமைப்பு, மிகச் சிறந்த செயல்திறனுடன் எரிபொருளில் சமரசம் செய்து கொள்ளாத தொழில்நுட்பம், சொகுசுக்காரும் கச்சிதமான அளவில் இருக்கலாம் என்ற புதிய சிந்தனை, "ஜெர்மானிய சிறந்த கார்' "யெல்லோ ஏஞ்சல் 2013' போன்ற விருதுகளை வென்ற பெருமை என்று மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொப்பியில் மற்றொரு சிறப்பான இறகு தான் இந்த A க்ளாஸ் ஹேட்ச் பேக்.

சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்
, சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்
, சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்
,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘சென்செக்ஸ்’ 265 புள்ளிகள் அதிகரிப்பு மீண்டும் 19,000 புள்ளிகளை கடந்தது
பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் வெளியிடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வியாபாரம் மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ மூன்று மாதங்களில்

மேலும்...

 மாருதி நிறுவனத்தில் அக்டோபர் 15க்குள் முழு உற்பத்தி
அரியானா மாநிலம், குர்கான் அருகே உள்ள மானேசரில் இருக்கும் மாருதி தொழிற்சாலையில் ஜூலை 17ம் தேதி நடந்த கலவரத்தில் அதிகாரி ஒருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆலை இழுத்து மூடப்பட்டது. பல தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில்

மேலும்...

 `சென்செக்ஸ்' 141 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக புதன்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 141 புள்ளிகளை இழந்தது. ஆக பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் சிக்கி உள்ளது.நிதி பற்றாக்குறை அதிகரிப்பு, ஐரோப்பிய

மேலும்...

 `செக்', `டிராப்ட்'கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்
வங்கிகள் வழங்கும், `செக்' `டிராப்ட்' மற்றும் `பே ஆர்டர்'கள் போன்றவை தற்போது 6 மாதங்கள் வரை செல்லும். இந்த நீண்ட அவகாசத்தை பயன்படுத்தி அவற்றை புழக்கத்துக்கு விட்டு முறையற்ற ஆதாயம் அடைந்து வருவதாக புகார்கள் எழுந்தன.அதைத் தொடர்ந்து, வங்கிகளின் செக் மற்றும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in