tamilkurinji logo


 

சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை,cesarean delivery Recovery, Risks, Benefits, Pain, and More

cesarean,delivery,Recovery,,Risks,,Benefits,,Pain,,and,More




சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை

First Published : Tuesday , 19th July 2016 06:32:16 PM
Last Updated : Tuesday , 19th July 2016 06:32:16 PM


சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை,cesarean delivery Recovery, Risks, Benefits, Pain, and More

சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.

சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.

சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது.


தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.

சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.

பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.

சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை,cesarean delivery Recovery, Risks, Benefits, Pain, and More சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை,cesarean delivery Recovery, Risks, Benefits, Pain, and More சிசேரியன்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டியவை,cesarean delivery Recovery, Risks, Benefits, Pain, and More
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்
ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள்  கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய

மேலும்...

 இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.

மேலும்...

 அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்

மேலும்...

 இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in