சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்:கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்:கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு
சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மோடி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது. ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது.

தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்காலத்தில் சிபிஎஸ்இ வினாத்தான் முன்கூட்டியே வெளியாகாதபடி தடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மறுதேர்வுகள் கடினமாக இருக்காது; மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என ஜவடேகர் கூறியுள்ளார். வினாத்தாளில் சில பகுதிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.

https://goo.gl/tmLQSQ


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்