tamilkurinji logo


 

சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு - ஜெயலலிதா அறிவிப்பு,




செய்திகள் >>> தமிழகம்

சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு - ஜெயலலிதா அறிவிப்பு

First Published : Sunday , 25th December 2011 11:45:09 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு  - ஜெயலலிதா அறிவிப்பு,

சிறப்பாகப் பணியாற்றும் மூன்று அரசு ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பதக்கமும், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாகப் பயன்படுத்தி, அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும், அதன் பலன்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்திடவும் அரசு ஊழியர்கள் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் கையாண்ட உத்திகள், புது முயற்சிகள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் தொடக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று "நல் ஆளுமை விருது' என்ற விருது வழங்கிட முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.

இந்த விருது பொது மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், மேம்பாட்டு முயற்சிகள், வரிமேலாண்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையில் இருக்கும்.

பதக்கமும், பரிசுத் தொகையும்: மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் கண்டறியப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு அவை அரசினால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவால் ஆராயப்படும்.

"சிறந்த ஆளுகை", "நிர்வாகத்தில் புது உத்திகள் புகுத்துதல்' ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்ற மூன்று அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில், ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும், பதக்கமும் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.

தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிர்வாகத்தில் ஊழியர்களுக்கு இடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன்மாதிரி திட்டத்துக்கு, விருதுகளுக்காக ரூ.6 லட்சமும், அவற்றைத் தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் ரூ.8 லட்சமும் என மொத்தம் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டு, அரசு நிர்வாகம் இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுக்கும். இதனால், அரசு அலுவலர்களிடையே புதிய உத்திகளைக் கையாண்டு, மக்களுக்கு இன்னும் மேன்மையான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைய வாய்ப்புகள் அதிகமாகும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு  - ஜெயலலிதா அறிவிப்பு, சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு  - ஜெயலலிதா அறிவிப்பு, சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு  - ஜெயலலிதா அறிவிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in