`சென்செக்ஸ்' மீண்டும் 17,000 புள்ளிகளை தாண்டியது

`சென்செக்ஸ்' மீண்டும் 17,000 புள்ளிகளை தாண்டியது
நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 304 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியிடப்பட்டது. மேலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதையடுத்து, அமெரிக்க மைய வங்கி சலுகை திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என்ற நிலைப்பாட்டால் வங்கி பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மேலும் மின்சாரம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், எல்-டி, பாரத ஸ்டேட் வங்கி, பீ.எச்.இ.எல்., கெயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. உள்ளிட்ட 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 304.49 புள்ளிகள் அதிகரித்து 17,143.68 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 17,163.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,919.14 புள்ளிகள் வரையிலும் சென்றது. இப்பங்குச் சந்தையில் 1,616 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,143 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 99.95 புள்ளிகள் உயர்ந்து 5,199.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,206.60 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,129.75 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/p9kiSR


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்