`சென்செக்ஸ்' மீண்டும் 19,000 புள்ளிகளை தாண்டியது

`சென்செக்ஸ்' மீண்டும் 19,000 புள்ளிகளை தாண்டியது
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக வியாழக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 188 புள்ளிகள் அதிகரித்து, 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 19,000 புள்ளிகளைத் தாண்டியது. இதனால், முதலீட்டாளர்கள் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.48,000 கோடி அதிகரித்து ரூ.66.71 லட்சம் கோடியாக உயர்ந்தது.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது. வர்த்தகம் முடிந்ததும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், கார்கள் விற்பனை குறைந்து வருவதால் மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து வருவதையடுத்து, ஐ.டி. துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பீ.எச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேப், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 188.46 புள்ளிகள் அதிகரித்து 19,058.15 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 19,107.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,939.75 புள்ளிகள் வரையிலும் சென்றது. மும்பை பங்குச் சந்தையில் 1,700 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,240 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 56.35 புள்ளிகள் உயர்ந்து கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு 5,787.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,807.25 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,751.35 புள்ளிகளுக்கும் சென்றது. இக்குறியீட்டு எண்ணை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள், 35 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
https://goo.gl/NvPkgn






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்