tamilkurinji logo


 

'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி,SENSEX

SENSEX




'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி

First Published : Monday , 16th July 2012 08:48:10 PM
Last Updated : Monday , 16th July 2012 08:48:10 PM


'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி,SENSEX

நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

ஜுன் மாதத்தில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் விலை உயர்ந் துள்ளது. இதனையடுத்து, அம்மாதத்தில் பொது பணவீக்கம் 7.25 சதவீதமாக குறைந்துள்ள நிலையிலும், உணவு பணவீக்கம் 10.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பில்லை என கிரிசில் நிறு வனத்தின் தலைமை பொருளியல் வல்லுனர் டீ.கே.ஜோஷி தெரிவித்துள்ளார்.

பருவமழை குறைந்துள்ளதால், வேளாண் உற்பத்தி வளர்ச்சியை நிலைநிறுத்துவது விவசாயி களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால், பங்கு வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

ஜுன் காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்தது. இதனையடுத்து, உலோகத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினம் இவ்வாண்டில் 3 சதவீதம் மட்டுமே உயரும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் முன்னறி விப்பு செய்துள்ளது. இதனையடுத்து, ஐ.டி. துறை நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்தது.

மேலும், ரியல் எஸ்டேட், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டாட்டா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை

வர்த்தகம் முடியும்போது பீ.எஸ்.இ. `சென்செக்ஸ்' 110.39 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,103.31 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 17,282.30 புள்ளி கள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,079.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 30 புள்ளிகள் சரிந்து 5,197.25 புள்ளி களில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,246.85 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,190.45 புள்ளிகளுக்கும் சென்றது.

'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி,SENSEX 'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி,SENSEX 'சென்செக்ஸ்' 110 புள்ளிகள் வீழ்ச்சி,SENSEX
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in