tamilkurinji logo


 

`சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி,Sensex

Sensex




`சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி

First Published : Wednesday , 5th September 2012 09:09:34 PM
Last Updated : Wednesday , 5th September 2012 09:09:34 PM


`சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி,Sensex

நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 127 புள்ளிகளை இழந்தது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த விவகாரத்தால் பாராளுமன்றம் 11 தினங்களாக முடங்கி உள்ளது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந் தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது.

இதுபோன்ற காரணங்களால் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக உலோகம், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறு வனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

லண்டன் உலோக சந்தையில் உலோகங்கள் விலை மிகவும் குறைந்ததையடுத்து, நம் நாட்டில் ஜிந்தால் ஸ்டீல் - பவர் மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது. பொறியியல் துறை குறியீட்டு எண் 2.64 சதவீதம் குறைந்தது.

பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாலும், நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களை குறைத்து வருவதாலும் பொறியியல் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் ஐந்து மிகப் பெரிய வங்கிகளின் வாராக்கடன், சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 62 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச தர நிர்ணய அமைப்பான `ஃபிட்ச்' தெரிவித்துள்ளது. மேலும், மறு சீரமைக்கப்படும் கடனும் மிகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை யடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட பல வங்கி பங்குகள் விலை மிகவும் குறைந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிடுவதில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவீதம் குறைந்தது. இதனை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 21 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 127.53 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,313.34 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 17,411.67 புள்ளி கள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,250.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 48.30 புள்ளிகள் குறைந்து 5,225.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,259.50 புள்ளிகளுக் கும், குறைந்தபட்சமாக 5,215.70 புள்ளிகளுக்கும் சென்றது. இக்குறியீட்டு எண்ணை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள், 41 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.

`சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி,Sensex `சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி,Sensex `சென்செக்ஸ்' 127 புள்ளிகள் வீழ்ச்சி,Sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in