`சென்செக்ஸ்' 141 புள்ளிகள் சரிவு

`சென்செக்ஸ்' 141 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக புதன்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 141 புள்ளிகளை இழந்தது. ஆக பங்கு வியாபாரம் கரடியின் பிடியில் சிக்கி உள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு, ஐரோப்பிய நாடுகளின் மந்தநிலையால் ஏற்றுமதி குறைந்து வருவது போன்ற காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6 சதவீதத்திற்கும் கீழாக செல்லும் பல சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் தெரிவித்துள்ளன. வட்டி வீதங்களை குறைப்பதால் குறுகிய கால அடிப்படையில்தான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அதிக பணவீக்கத்தால் நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் எனவும் பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சலுகைகள் அளிக்க வாய்ப்பில்லை என்ற செய்தி பரவியது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான அறிகுறிகள் தென்படாததால் சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதி ரொலித்தது.

சர்வதேச பொருளாதார மந்தநிலையால் உருக்கு, அலுமினியம் விலை குறையும் என்ற நிலைப்பாட்டால் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், `செயில்' சேசகோவா ஹிண்டால்கோ உள்ளிட்ட உலோகத்துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகள் விலை குறைந்தது.

மேலும் டீ.எல்.எஃப். உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மற்றும் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார் கார்ப் போன்ற மோட்டார் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலையும் குறைந்தது. அதேசமயம் நுகர்பொருள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 140.90 புள்ளிகள் குறைந்து 17,490.81 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 17,653.90 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 17,471.13 புள்ளிகளுக்கும் சென்றது. `சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 21 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 46.80 புள்ளிகள் குறைந்து 5,287.80 புள்ளிகளில் நிலைபெற்றது. இது அதிகபட்சமாக 5,345.50 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,282.70 புள்ளிகளுக்கும் சென்றது.`நிஃப்டி' கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் 35 நிறுவன பங்குகள் விலை குறைந்தது.
https://goo.gl/FfnjZQ


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்