tamilkurinji logo


 

`சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி,sensex

sensex




`சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி

First Published : Thursday , 20th September 2012 10:49:26 PM
Last Updated : Thursday , 20th September 2012 10:49:26 PM


`சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி,sensex

நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமை அன்று மிகவும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு 147 புள்ளிகளை இழந்தது.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி போன்ற மத்திய அரசின் முடிவுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து விலக அண்மையில் முடிவு செய்தது. அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது, நாட்டின் பங்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.

இந்நிலையில், சர்வதேச நிலவரங்களும் பங்கு வியாபாரத்துக்கு சாதகமாக இல்லை. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. பொருளாதார வளர்ச்சி வேகத்தில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சீனாவில் ஆகஸ்டு மாதத்தில் உற்பத்தி துறையில் 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

வியாழக்கிழமை அன்று உலோகம், பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம் தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கும்.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பீ.எச்.இ.எல்., கெயில் மற்றும் மற்றும் கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 146.76 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 18,349.25 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,443.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,291.93 புள்ளிகள் வரையிலும் சென்றது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 45.80 புள்ளிகள் சரிவடைந்து 5,554.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,581.35 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,534.90 புள்ளிகளுக்கும் சென்றது.

`சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி,sensex `சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி,sensex `சென்செக்ஸ்' 147 புள்ளிகள் வீழ்ச்சி,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in