`சென்செக்ஸ்' 161 புள்ளிகள் வீழ்ச்சி

`சென்செக்ஸ்' 161 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று மந்தமாக இருந்தது. மும்பை பங்ச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 161 புள்ளிகளை இழந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதால், பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 17-ந் தேதி வெளியிடும் பணக்கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என சில பொருளியல் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 5.5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது. இது முந்தைய காலாண்டு வளர்ச்சி மற்றும் பங்கு வர்த்தக நிபுணர்களின் மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகமாகும். மேலும் பணவீக்கமும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

எனவே பாரத ரிசர்வ் வங்கி வட்டிவீதங்களை குறைக்க வாய்ப்பில்லை என பல பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் மொத்தமுள்ள 13 துறைகளில் 12 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

`சென்செக்ஸ்' கணக்கிடுவதில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், ஐ.டி.சி., டி.சி.எஸ்., ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, பீ.எச்.இ.எல். ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 160.89 புள்ளிகள் குறைந்து 17,380.75 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 17,557.62 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 17,337.61 புள்ளிகளுக்கும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 56.55 புள்ளிகள் குறைந்து 5,258.50 புள்ளிகளில் நிலைகொண்டது. `நிஃப்டி' கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் 43 நிறுவன பங்குகள் விலை குறைந்தது.
https://goo.gl/isbL7s


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்