tamilkurinji logo


 

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு ,Sensex 169 points

Sensex,169,points




சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு

First Published : Friday , 30th November 2012 08:28:16 PM
Last Updated : Friday , 30th November 2012 08:28:16 PM


சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு ,Sensex 169 points

நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக வெள்ளிக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்தது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.3% குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் தொழில்துறை உற்பத்தியில் நான்கு முறை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொறியியல் துறை உற்பத்தியில் கடந்த 13 மாதங்களில் ஒரு முறை மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே, பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடனிற்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வங்கிகளின் வட்டிச் செலவினம் குறையும் என்பதால், பாரத ஸ்டேட் வங்கி (1.78%), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (1.56%), எச்.டீ.எஃப்.சி. வங்கி (0.70%) ஆகிய வங்கி பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. வட்டி விகிதம் குறைக்கப்படுவதால் நுகர்வோர் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால் இத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. மேலும், மின் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலோகங்கள் விற்பனை அதிகரிக்கும். இதனையடுத்து, இத்துறையைச் சேர்ந்த ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பல நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது. இந்தியாவின் கடன் பெறும் தகுதி ஸ்திரமாக இருக்கும் என மூடிஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது. இதுவும் பங்கு வர்த்தகத்திகு வலுச் சேர்ப்பதாக அமைந்தது.
வர்த்தகம் முடியும்போது சென்செக்ஸ் 168.99 புள்ளிகள் உயர்ந்து 19,339.90 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,372.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,186.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 54.85 புள்ளிகள் அதிகரித்து 5,879.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,885.25 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,827.85 புள்ளிகளுக்கும் சென்றது. 

சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு ,Sensex 169 points சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு ,Sensex 169 points சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு ,Sensex 169 points
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in