`சென்செக்ஸ்' 19 புள்ளிகள் சரிவு

`சென்செக்ஸ்' 19 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது தினமாக வெள்ளிக்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 19 புள்ளிகளை இழந்தது.

சர்வதேச பொருளாதார மந்தநிலையால், ஜுன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 5.45 சதவீதம் சரிவடைந்தது. மேலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.

இதுபோன்ற காரணங்களால் மொத்தமுள்ள 13 துறைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்பொருள் ஆகிய துறைகள் நீங்கலாக 11 துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. ஜுன் மாதத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்ததையடுத்து, உலோகத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் ஸ்டீல், டாட்டா பவர், பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 17 நிறுவன பங்குகள் விலை குறைந்தது. அதேசமயம், ஹீரோ மோட்டோ கார்ப், எச்.டீ.எஃப்.சி. வங்கி, டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 13 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது. இல்லையென்றால் பங்கு வர்த்தகத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.

வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 18.85 புள்ளிகள் குறைந்து 17,213.70 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 17,342.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,182.29 புள்ளிகள் வரையிலும் சென்றது. இப்பங்குச் சந்தையில் 1,474 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,304 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 8 புள்ளிகள் சரிந்து 5,227.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,267.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,216.85 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/X54PSN






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்