சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளது.

 கடந்த 2 வாரத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.நடப்பு ஜனவரி மாதத் திலும், பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடு களை திரும்ப பெற்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்தியில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மத்தியில் தொடங்கி 15 தினங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ள தாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் பத்திரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 500 கோடி டாலரை அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மை உள்ளிட்ட சூழல், மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்நிய நிதி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2013ம் ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.1.12 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தன. மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய ஆட்சியை பொறுத்தே அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என்றும் பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
https://goo.gl/MJPgN4






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்