`சென்செக்ஸ்' 229 புள்ளிகள் வீழ்ச்சி

`சென்செக்ஸ்' 229 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமாக திங்கள்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவிற்கு 229 புள்ளிகளை இழந்தது. முதலீட் டாளர்கள் பங்குகள் சந்தை மதிப்பு ரூ.62,000 கோடி குறைந்தது.

ஐரோப்பிய நாடுகள்

கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர் என்ற செய்தியால் ஐரோப்பிய நாடுகளில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித் தது. மேலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.

இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. அதே சமயம், மருந்து மற்றும் நுகர்பொருள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா டீ.எல்.எஃப். நிறுவனத்திடமிருந்து பிணை மற்றும் வட்டியில்லாத கடன் ரூ.65 கோடி வாங்கியுள்ளதாக புகார் கூறியதையடுத்து டீ.எல்.எஃப். பங்கின் விலை 7.3 சதவீதம் சரிவடைந்தது. கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிங்ஃபிஷர் நிறுவன பங்கின் விலையும் தொடர்ந்து ஏழாவது தினமாக சரிவடைந்துள்ளது.

`சென்செக்ஸ்' கணக்கிடுவதில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்கின் விலை 4.51 சதவீதம் குறைந்தது. மேலும், இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ, பீ.எச்.இ.எல்., எல்-டி, பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு `சென்செக்ஸ்' 229.48 புள்ளி கள் வீழ்ச்சி கண்டு 18,708.98 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,969.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,684.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 70.95 புள்ளிகள் குறைந்து 5,676 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,751.85 புள்ளி களுக்கும், குறைந்தபட்சமாக 5,666.20 புள்ளிகளுக்கும் சென்றது.

https://goo.gl/FMbq5f


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்