`சென்செக்ஸ்' 38 புள்ளிகள் சரிவு

`சென்செக்ஸ்' 38 புள்ளிகள் சரிவு
கடந்த இரண்டு தினங்களாக நன்றாக இருந்த பங்கு வியாபாரத்தில் புதன்கிழமை அன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 38 புள்ளிகளை இழந்தது.

ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், பங்குச் சந்தைகளில் நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்தது.

இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

கிரெடிட் சுïஸி என்ற சர்வதேச பங்கு வர்த்தக தரகு நிறுவனம், செல்போன் சேவையில் முன்னிலை வகித்து வரும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்கில் முதலீடு செய்வதற்கான மதிப்பீட்டை குறைத்தது. இதனையடுத்து, நேற்று இந்நிறுவன பங்கின் விலை 4 சதவீதம் குறைந்தது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் இம்மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 37 சதவீதம் சரிவடைந்தது.எனவே, கடந்த 10 தினங்களில் இதன் பங்கின் விலை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் என்.டி.பி.சி., ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், கெயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (எச்.டீ.எஃப்.சி), டாட்டா பவர், எல் - டி மற்றும் டி.சி.எஸ். உள்ளிட்ட 18 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம், டாக்டர் ரெட்டீஸ் லேப், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லையென்றால் பங்கு வர்த்தகத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்'38.40 புள்ளிகள் குறைந்து 17,846.86 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 17,912.08 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,800.29 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 8.15 புள்ளிகள் சரிந்து 5,412.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,433.35 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,394.80 புள்ளிகளுக்கும் சென்றது. இக்குறியீட்டு எண்ணை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் 29 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
https://goo.gl/zARJhe






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்