சென்செக்ஸ் 404 புள்ளிகள் அதிகரிப்பு

சென்செக்ஸ் 404 புள்ளிகள் அதிகரிப்பு
பங்கு வியாபாரத்தில் வெள்ளிக்கிழமையன்று பெரும் விறுவிறுப்பு காணப்பட்டது. இதனால் சென்செக்ஸ் 404 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 137 புள்ளிகள் அதிகரித்தது.

நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் உத்வேகம் அடைந்துள்ளன. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகி விட்ட சூழ்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். முன்னதாக நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முலாயம் சிங் தனது அறிவிப்பால், பொருளாதார சீர்திருத்தங்கள் மேலும் தீவிரமடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். இதனால் பாராளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வரும் அபாயமும் நீங்கியது.

இதற்கிடையே மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சலுகையை அறிவித்தார். இதன்படி வெளிநாடுகளில் கடன் திரட்டும் இந்திய நிறுவனங் களுக்கான வரியை, 2012 ஜுலை மாதத்திலிருந்து 2015 ஜுன் மாதம் வரை அதிரடியாக 5 சதவீதமாக குறைத்தார். இந்த வரி விகிதம் முதலில் 20 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையால் வெளிநாட்டு பணம் அதிக அளவில் வரும். அத்து டன், வெளிநாட்டு வணிக கடனை கொண்டு ஏற்கனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும்.

நேற்று நடைபெற்ற இந்த திருப்பங்களால் பங்கு வியாபாரம் கிடுகிடு முன்னேற்றம் கண்டது. ஒரு சில நிறுவனங்களைத் தவிர அனைத்து நிறுவனப் பங்குகளின் விலையும் குறிப்பிடத் தக்க அளவிற்கு உயர்ந்தது. பாரத ஸ்டேட் வங்கி, லார்சன் அண்டு டூப்ரோ, எம்.ஆர்.எஃப். உள்ளிட்ட அனைத்து புளூசிப் நிறுவனப் பங்குகளின் விலையும் எகிறியது. பொதுவாக அனைத்து வங்கிகளின் பங்கின் விலையும் நன்கு உயர்ந்தது. பொதுத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றம் பெற்றது.

பங்கு வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.58 புள்ளிகள் உயர்ந்து 18,752.83 புள்ளிகளில் நிலை கொண்டது. கடந்த 52 வாரங் களுக்குப் பின் முதல் முறையாக இந்த அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,866.87 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 18,411.20 புள்ளிகளுக்கும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி, 136.90 புள்ளிகள் உயர்ந்து 5,691.15 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,720 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,575.45 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/NQH6LX


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்