tamilkurinji logo


 

`சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு,sensex

sensex




`சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு

First Published : Thursday , 25th October 2012 10:59:05 PM
Last Updated : Thursday , 25th October 2012 10:59:05 PM


`சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு,sensex

நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமை அன்ற ஓரளவிற்கு நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 49 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் `புளுசிப்' நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக, மகிந்திரா - மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கியின் நிகர லாபம் 30 சதவீதம் அதிகரித்ததையடுத்து பங்கின் விலை 4.29 சதவீதம் உயர்ந்தது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் நிகர லாபம் 80 சதவீதம் அதிகரித்ததையடுத்து பங்கின் விலை 7.05 சதவீதம் உயர்ந்தது. இதர வங்கிகளின் பங்குகளுக்கும் தேவைப்பாடு காணப்பட்டது. ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால், பொறியியல் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கினர்.

அதேசமயம் ரியல் எஸ்டேட், மருந்து ஆகிய துறைகளை சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. இல்லையென்றால், பங்கு வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பங்கின் விலை கடந்த நான்கு வர்த்தக தினங்களில் 17.5 சதவீதம் சரிவடைந்து ரூ.10.40-ஆக குறைந்து இருந்தது. இந்நிலையில், பணியாளர்கள் வேலையை மீண்டும் தொடர ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று இப்பங்கின் விலை 4.81 சதவீதம் அதிகரித்து ரூ.10.90-ல் நிலைபெற்றது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 48.61 புள்ளிகள் அதிகரித்து 18,758.63 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 18,789.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,699.07 புள்ளிகள் வரையிலும் சென்றது. இக்குறியீட்டு எண்ணை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 13.90 புள்ளிகள் உயர்ந்து 5,705.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 5,718.75 புள்ளிகளுக்கும், 5,685.70 புள்ளிகளுக்கும் சென்றது.

`சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு,sensex `சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு,sensex `சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in