சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 62 புள்ளிகள் சரிந்தது.

கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளுக்கு சலுகை வழங்க சில ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளால் அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து, சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

மேலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதனை யடுத்து, உலோகம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதேசமயம் மருந்து, நுகர்பொருள் துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லை யென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும்.

முன்னணி நிறுவனம் ஒன்று செல்போன் சேவை துறையில் களமிறங்க போவதாக செய்தி பரவியது. இதனால், கடும் போட்டி ஏற்பட்டு செல்போன் சேவை நிறுவனங்களின் வருவாய் குறையும் என்ற நிலைப்பாட்டால் பார்தி ஏர்டெல், ஐடியா, செல்லுலார் ஆகிய நிறுவனங் களின் பங்கு விலை மிகவும் குறைந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டாட்டா மோட்டார்ஸ், எச்.டீ.எஃப்.சி., எல் - டி, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட 21 நிறுவனங் களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 62.24 புள்ளிகள் குறைந்து 18,632.17 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 18,670.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,573.18 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறி யீட்டு எண் `சென்செக்ஸ்' 10.45 புள்ளிகள் குறைந்து 5,663.45 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,672.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,638.65 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/uN7wCK






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்