tamilkurinji logo


 

`சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு,sensex

sensex




`சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு

First Published : Tuesday , 25th September 2012 07:56:03 PM
Last Updated : Tuesday , 25th September 2012 07:56:03 PM


`சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு,sensex

நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 79 புள்ளிகள் குறைந்தது.

இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேளாண் மற்றும் அது சார்ந்த தொலை சார்ந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலதாமதமாக பெய்துள்ளதால், நடப்பு 2012-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக குறையும் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான எஸ் - பி தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பொருளா தாரத்தில் 6.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என முன்னறிவிப்பு செய்து இருந்தது.

ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் இந்துஸ்தான் யுனிலீவர், ஐ.டி.சி. உள்ளிட்ட நுகர்பொருள் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் குறைந்தது. மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறு வனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம் மின்சாரம், ரியல் எஸ் டேட், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

`சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் எச்.டீ.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி., சிப்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 17 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. அதே சமயம், பீ.எச்.இ.எல்., மகிந்திரா - மகிந்திரா, எச்.டீ.எஃப்.சி. பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக சரிவு ஏற்பட்டு இருக்கும். வர்த்தகம் முடியும்போது `சென் செக்ஸ்' 79.49 புள்ளிகள் சரிந்து 18,673.34 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,811.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,650.43 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 21.55 புள்ளிகள் குறைந்து 5,669.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,709.85 புள்ளிகளுக் கும், குறைந்தபட்சமாக 5,662.75 புள்ளிகளுக்கும் சென்றது.

`சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு,sensex `சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு,sensex `சென்செக்ஸ்' 79 புள்ளிகள் சரிவு,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in