சென்செக்ஸ்' 80 புள்ளிகள் அதிகரிப்பு

சென்செக்ஸ்' 80 புள்ளிகள் அதிகரிப்பு
நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று ஓரளவு நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 80 புள்ளிகள் அதிகரித்தது.

கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலத்தில் இங்கிலாந்து நாட்டில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிதாக 1,81,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. அந்நாட்டின் வேலையின்மை விகிதம் 8.3 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இந்திய பங்கு வியாபாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 10.02 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது. ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபோன்ற காரணங்களால் உலோகம், பொறியியல், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. இல்லையென்றால் பங்கு வர்த்தகத்தில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருந்ததையடுத்து, இந்நிறுவன பங்கின் விலை 5.25 சதவீதம் உயர்ந்தது. மேலும், டாட்டா பவர், ஜிந்தால் ஸ்டீல், மாருதி, எல் - டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பீ.எச்.இ.எல்., கோல் இந்தியா, டாட்டா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது.

வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 79.71 புள்ளிகள் அதிகரித்து 17,185.01 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக 17,205.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,038.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. இப்பங்குச் சந்தையில் 1,404 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,374 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 23.45 புள்ளிகள் உயர்ந்து 5,216.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,222.85 புள்ளிகளுக் கும், குறைந்தபட்சமாக 5,169.05 புள்ளிகளுக்கும் சென்றது.
https://goo.gl/kCx5bX


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்