tamilkurinji logo


 

சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு,Sensex

Sensex




சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு

First Published : Tuesday , 9th October 2012 09:45:15 PM
Last Updated : Tuesday , 9th October 2012 09:45:15 PM


சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு,Sensex

செவ்வாய்க்கிழமையன்று பங்கு வியாபாரம் சுமாராக இருந்தது. காலையில் மிக விறு விறுப்பாக இருந்த வர்த்தகம் போகப் போக வேகம் குறைந்தது. இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 29 புள்ளிகள் அதிகரித்தது.

நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு நிதி நிலை முடிவுகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நட வடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு உயர்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றன.

வங்கி, ஐ.டி., நுகர்பொருள், பொறியியல் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை நன்கு உயர்ந்தது. அடிப்படைக் கட்ட மைப்பு, சிமெண்டு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றம் பெற்றது. பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்ற நிலையில், அநேக நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்த அளவிற்கே சரிந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் இன்ஃபோசிஸ், லார்சன் அண்டு டூப்ரோ, சன் பார்மாசூட்டிக்கல்ஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ïனிலீவர் ஆகிய பங்குகளின் விலை நன்கு உயர்ந்தது. அதே சமயம் கெயில், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், பீ.எச்.இ.எல்., டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.38 புள்ளிகள் உயர்ந்து 18,793.36 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,885.84 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 18,722.05 புள்ளி களுக்கும் சென்றது. இச்சந்தையில் 1,497 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,326 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் ஓரளவு நன்றாக இருந்தது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி, 28.60 புள்ளிகள் உயர்ந்து 5,704.60 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,728.65 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,677.90 புள்ளிகளுக்கும் சென்றது.

சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு,Sensex சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு,Sensex சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு,Sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in