tamilkurinji logo


 

சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை,tamil news india news tamil cinema news

tamil,news,india,news,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை

First Published : Tuesday , 22nd May 2018 09:28:41 PM
Last Updated : Tuesday , 22nd May 2018 09:28:41 PM


சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை,tamil news india news tamil cinema news

சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.


சாதாரணமாக இரவிலும், அதிகாலையிலும் ஆளரவமற்ற தனியான இடங்களில் பயந்து பயந்து செயின் பறித்த நபர்கள் துணிந்து பட்டப்பகலில் ஸ்கெட்ச் போட்டு பறித்துச்செல்வதும் அதை மற்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்ப்பதும் நடந்தது.

அடுத்த கட்டமாக செல்போன் பறிப்புக்காக ஒரு மாணவர் நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்டதும், லாவண்யா என்பவர் பெரும்பாக்கத்தில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி பிழைத்ததும் நடந்தது.


அதன் பின்னர் சமீப காலமாக பெண்களைத் தாக்கி நகை பறிப்பது, ஆண்களை வெட்டி செல்போனை பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

இதன் உச்சகட்டமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளதை நேற்று சென்னையில் நடந்த இரண்டு சம்பவங்கள் உணர்த்துகின்றன.

முதல் சம்பவம் சென்னை தி. நகரில் நடந்துள்ளது. சென்னை சவுத் போக் சாலையில் வசிப்பவர் ரமேஷ் (38). இவரது மனைவி விஜயா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு இரவு வேலைக்கு கிளம்பிச் சென்றார் ரமேஷ். வீட்டில் விஜயா மற்றும் இரு குழந்தைகளுடன் தனியாக இருந்தார். ரமேஷின் உறவினர் வினோத். இவர் அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் இரவு வினோத் ரமேஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் மது போதையில் இருந்துள்ளார்.

வீட்டில் ரமேஷ் இல்லை என்று தெரிந்த வினோத்துக்கு வினோத ஆசை எழுந்துள்ளது. மது போதையில் விஜயா தனிமையில் இருப்பது அறிந்து வெளியே வந்தவர் தனது நண்பர்கள் அருண், ஜெயச்சந்திரன் ஆகியோருடன் மீண்டும் வினோத் சென்றுள்ளார். மீண்டும் வந்த வினோத்தை உறவினர் தானே என சந்தியா வீட்டிற்குள் அழைத்துப் பேசியுள்ளார்.

அப்போது வினோத், சந்தியாவின் இரு குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்று மிரட்டி விஜயாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தப்பி ஓடிவிட்டார்.


வேலையை விட்டு வந்த தனது கணவர் ரமேஷிடம் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைக் கூறி விஜயா அழுதுள்ளார். இதையடுத்து ரமேஷ் விஜயாவை அழைத்துக்கொண்டு தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் வினோத்தை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி குறைவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக சென்னை பாடி புதுநகரில் வசித்து வருபவர் ராதா (25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் மூன்றாண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். நேற்றிரவு இவர் பணி முடிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லதாவைப் பார்த்தவுடன் அவரைக் கத்திமுனையில் எழுப்பியுள்ளார்.

எழுந்த லதாவை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து லதா ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை,tamil news india news tamil cinema news சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை,tamil news india news tamil cinema news சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை,tamil news india news tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in