tamilkurinji logo


 

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி,
செய்திகள் >>> தமிழகம்

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி

First Published : Sunday , 25th December 2011 07:00:10 PM
Last Updated : Monday , 26th December 2011 09:05:42 AM


சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி,

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றபோது, இந்த கோர விபத்து நடந்தது.

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது பழவேற்காடு ஏரி.

வங்க கடலின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, இந்தியாவிலேயே 2-வது பெரிய உப்புநீர் ஏரி ஆகும். 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட ஏரி சிறந்த சுற்றுலாதலமாக விளங்குகிறது. இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்த ஏரியில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்தது.

pazhaverkadu-03.jpg

     மேலும் படங்கள்

அதுபற்றிய விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (68). இவர் கும்மிடிப்பூண்டியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது மகன்கள் ஜெயதுரை (45), தங்கராஜ் (33), கனகராஜ் (35), ஆசிர்வாதம் (38) ஆகியோர் கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும், மகள் பாக்கியமணி தியாகராய நகரிலும் வசித்து வந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவதும், அதையொட்டி ஏதேனும் ஒரு இடத்துக்குச் சுற்றுலா செல்வதும் வழக்கம்.

அதே போல் நேற்றும் சுந்தரபாண்டியன், அவரது மனைவி, மகன்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 22 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவிட்டு பகல் 11 மணி அளவில் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்களுடன், சுந்தரபாண்டியனின் பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் அனிதா (20) என்ற பெண்ணும் சென்றார். இவர் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவரின் மகள் ஆவார்.

அங்கு அவர்கள் ஒரு படகில் ஏறி, ஏரிக்குள் சென்றனர். படகை அன்சாரி என்பவர் ஓட்டினார். அன்சாரின் மனைவி நசீரா பானுவும் (20) அவர்களுடன் சென்றார். அங்குள்ள ஒரு தீவுக்கு சென்ற அவர்கள் அங்கு அமர்ந்து மதிய உணவு அருந்தினார்கள். பின்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் படகில் ஏரி கரைக்கு புறப்பட்டனர்.

படகு முகத்துவாரத்தை தாண்டி வந்தபோது எதிர்பாராத விதமாக பலத்த அலைகள் எழுந்தன. அந்த அலைகளில் சிக்கி அங்கும் இங்குமாக தள்ளாடிய படகு திடீரென்று கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் அலறியபடி ஏரிக்குள் விழுந்தனர்.

சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இந்த பயங்கர விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, போலீஸ் சூப்பிரண்டு வனிதா, டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோரும் தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். மேலும் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்ராஜா, பொன்னேரி ஆர்.டி.ஓ. கந்தசாமி ஆகியோரும் பழவேற்காடு ஏரிக்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலியானவர்களில் 5 ஆண்கள், 7 பெண்கள், 4 குழந்தைகள் ஆகிய 16 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்களில் 6 வயது சிறுவன், 6 மாத குழந்தை ஆகியோரின் உடல்களும் அடங்கும்.

அதற்குள் இருட்டி விட்டதால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 3 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்து தண்ணீருக்குள் விழுந்தவர்களில் ஜனகராஜ் (13), பால் தினகரன் (10), பவுல்ராஜ் (12) ஆகிய மூன்று பேரும் படகை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி கிடந்தனர். அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

இவர்களில் ஜனகராஜும், பால் தினகரனும் சுந்தரபாண்டியனின் பெரிய மகன் ஜெயதுரையின் மகன்கள் ஆவார்கள்.

இந்த விபத்தில் படகை ஓட்டிச் சென்ற அன்சாரியும் உயிர் தப்பி விட்டார்.

இந்த விபத்தில் பலியானவர்களில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும் சிலரது உடல்கள் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சுந்தரபாண்டியன்

2. பாக்கியமணி (40), சுந்தரபாண்டியனின் மகள்.

3. சுந்தரமேரி (43), சுந்தரபாண்டியனின் மருமகள்

4. ஜுலியட் (6 மாத கைக்குழந்தை)

5. நசீரா பானு

மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது

படகில் பயணம் செய்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சுந்தரபாண்டியன்

2. ஜெயஜோதி (60), சுந்தரபாண்டியனின் மனைவி

3. ஜெயதுரை (45), சுந்தரபாண்டியனின் மகன்

4. சுந்தரமேரி (42), ஜெயதுரையின் மனைவி

5. ஜனகராஜ் (16), ஜெயதுரையின் மகன்

6. பால் தினகரன் (10), ஜெயதுரையின் மகன்

7. ரோஸ்லின் மேரி (13), ஜெயதுரையின் மகள்

8. ஆசீர்வாதம் (38), சுந்தரபாண்டியனின் மகன்

9. ஜனனி (31), ஆசீர்வாதத்தின் மனைவி

10. மெர்லின் (12), ஆசீர்வாதத்தின் மகள்

11. சார்லி (6), ஆசீர்வாதத்தின் மகன்

12. கனகராஜ் (35) சுந்தரபாண்டியனின் மகன்

13. பிïலா (28), கனகராஜ் மனைவி

14. ஜோஸ்வா (4), கனகராஜ் மகன்

15. இம்மானுவேல் (1), கனகராஜ் மகன்

16. தங்கராஜ் (33), சுந்தரபாண்டியனின் மகன்

17. வசந்தா (24), தங்கராஜ் மனைவி

18. ஜுலியட் ( 6 மாதம்)

19. பாக்கியமணி (40), சுந்தரபாண்டியனின் மகள்

20. டேனியல் (45), பாக்கியமணியின் கணவர்

21. கோயில்ராஜ் (16)

22. பவுல்ராஜ் (14)

23. மனோஜ் (12)

இவர்கள் மூவரும் டேனியலின் மகன்கள்

24. அனிதா (20), கடையில் பணிபுரியும் பெண்

25. நசீரா பானு (20)


சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி, சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி, சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து;  22 பேர் பலி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி
சென்னை சூளைமேட்டில் தாயின் அஜாக்கிரதை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பலியானது.சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூவில் மஞ்சு பிளாட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 6 அடுக்குகளும், 7- வதாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in