tamilkurinji logo


 

சென்னையை நெருங்குகிறது "தானே" புயல்,Thane cyclone

Thane,cyclone,




செய்திகள் >>> தமிழகம்

சென்னையை நெருங்குகிறது "தானே" புயல்

First Published : Thursday , 29th December 2011 08:05:28 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


சென்னையை நெருங்குகிறது

வங்க கடலில் மையம் கொண்டுள்ள "தானே" புயல் தமிழகத்தை நெருங்கியது. இதன் காரணமாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது. பின்னர் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு "தானே" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல், நேற்று மாலை சென்னைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கில் 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடையே நாளை(வெள்ளிக்கிழமை) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை பெய்ய தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு-

வங்கக்கடலில் உருவான `தானே' புயல், செவ்வாய்க்கிழமை தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. அது மேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை), வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடையே, தமிழ்நாட்டில் கடலூருக்கும் ஆந்திராவில் நெல்லூருக்கும் இடையே தானே புயல் கரையைக் கடக்கிறது.

இதனால் இன்று முதல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

கனமழை பெய்யும் இடங்களில் 25 செ.மீட்டரும் அதற்கு மேலும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் தரைக்காற்று, இன்று காலை முதலே புயலாக வீசத்தொடங்கும்.

இந்த சூறைக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இது படிப்படியாக அதிகரித்து 95 கி.மீட்டர் முதல் 105 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கனமழை பெய்யும்போது இந்த புயல் காற்றின் வேகம் வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடைப்பட்ட பகுதியில் 120 கீ.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மழை பெய்யும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டங்களில் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்.

புயல் மற்றும் கடல் சீற்றம்-கொந்தளிப்பு காரணமாக தமிழக, ஆந்திர மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் இந்த தகவலை தெரிவித்தார்.

தானே புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் விரைவு சாலை முழுவதும் தடுப்பு கற்குவியல்கள் வீசி எறியப்பட்டுள்ளன; வீதிகளில் கடல் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.

எண்ணூரில் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

புயலின் சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் அலுவலர்கள், நீரை வெளியேற்றும் இயந்திரங்கள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கடும் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் கரையை நெருங்கும்போது சிறிது பலவீனம் அடையவும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை நெருங்குகிறது சென்னையை நெருங்குகிறது சென்னையை நெருங்குகிறது
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால்

மேலும்...

 கைலாஷ் யாத்திரை சென்ற 1,300 பக்தர்களில் சென்னை பக்தர்கள் 19 பேரும் நேபாளத்தில் சிக்கி தவிப்பு
நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற சென்னையை சேர்ந்த பக்தர்கள் 19 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.நேபாளத்தில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசரோவர் பகுதி அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட சில மாதங்களில் பக்தர்கள் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கடந்த

மேலும்...

 மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி  அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம்

மேலும்...

 உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பேருந்துகள் மோதல்: 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து தனியார் சொகு பேருந்து நேற்று இரவு 43 பயணிகளுடன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in