tamilkurinji logo


 

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது

First Published : Tuesday , 17th July 2018 01:36:59 PM
Last Updated : Tuesday , 17th July 2018 01:54:45 PM


சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் அயனாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் (12 வயது). இவருக்கு 2 காதுகளும் கேட்பதில் குறைபாடு உள்ளது. இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு   பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மன ரீதியிலும் பாதிப்படைந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பெற்றோர் தனியாக அமர்ந்து பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர், சிலர் தன்னிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர்.

அதன்படி பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், மாணவி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த காவலாளி, லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர் என அடுத்தடுத்து 18 பேர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டதாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர்களான 4 பேர்,  காவலாளிகளான 5 பேர், பிளம்பராக உள்ள 4 பேர் உட்பட மொத்தம் 18 பேரை பிடித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,  "மாணவியின் தந்தை அதிகாலை பணிக்குச் சென்றால் மீண்டும் இரவில்தான் வீடு திரும்புவார். தாயாரும் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே, மாணவி அடுக்குமாடியில் உள்ள லிப்ட் வழியாக தினமும் தனியாக இறங்கி கீழே வந்து பின்னர், வாகனம் மூலம் பள்ளிக்குச் சென்றுள்ளார். லிப்ட்டில் மாணவி வரும்போது லிப்ட் ஆபரேட்டர் ஒருவர் முதல் முதலில் மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில்   ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

பின்னர், அவர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வரும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதே பாணியில் கடந்த 7 மாதமாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in