சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடக்கம்

சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடக்கம்
சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடங்கப்படுகிறது. 29-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள பங்குச்சந்தையின் பவளவிழாவில் கவர்னர் ரோசய்யா கலந்துகொள்கிறார்.

இதுதொடர்பாக சென்னை பங்குச்சந்தை நிறுவன இயக்குனர் டி.சுதாகர் ரெட்டி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வி.நாகப்பன், எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள முக்கிய பங்குச்சந்தைகளில் சென்னை பங்குச்சந்தையும் ஒன்றாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான குறைகளை விரைந்து கையாண்டு முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இது சிறந்து விளங்கி வருகிறது. தமிழக அரசின் டிட்கோ, சிம்சன், அமிர்தாஞ்சன், ரிலையன்ஸ் உள்பட 2,200 பட்டியலிட்ட நிறுவனங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இங்குள்ள 60 நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக 2004-ம் ஆண்டு அது எடுக்கப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டுவருவது தொடர்பாக `செபி' அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம்.

செபி விதிமுறையின்படி, தற்போது ஆன்லைன் வர்த்தகம் கொண்டுவர வேண்டுமானால், 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் நடந்திருக்க வேண்டும். அதோடு, 3 ஆண்டுகளில் பங்குச்சந்தையின் நிகர மதிப்பு ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.

இந்த தகுதிகளை எல்லாம் பூர்த்தி செய்துவிடுவோம் என்பதால் நவம்பர் மாதம் செபியின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம்) ஆன்லைன் வர்த்தக முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

ஆன்லைன் வர்த்தக முறை வந்தால் சிறு-குறு நிறுவனங்கள், சிறிய முதலீட்டாளர்கள், சிறு பங்குமார்க்கெட் புரோக்கர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசு என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். அனைத்து பங்கு வர்த்தகமும் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவரப்படுவதால் அரசுக்கு சேவை வரி, செஸ் வரி, கூடுதல் செஸ் வரி என்று அதிகளவு வருவாய் கிடைக்கும்.

சென்னை பங்குச்சந்தையை பொறுத்தவரையில், பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 200 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும் நடத்தப்படுவதால் சாதாரண மக்களும் பயன் அடைகிறார்கள். சென்னையில் மட்டுமல்லாமல் வேலூர், கடலூர், பொள்ளாச்சி, நாகர்கோவில் உள்பட பல்வேறு 2-ம் நிலை நகரங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

புதிய முதலீட்டாளர்கள் பயன்பெறும் வண்ணம் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அறிமுக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். இதில் பங்கு மார்க்கெட் நிபுணர்கள் பேசுவார்கள்.

பங்கு முதலீடு குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் இந்த பயிற்சிகள் முற்றிலும் இலவசமாகவே நடத்தப்படுகின்றன. பங்கு முதலீடு தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட புத்தகம் வழங்கப்படுகிறது.

பங்கு வர்த்தகத்தோடு முதலீடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்து பணியிலும் ஈடுபட்டு வரும் சென்னை பங்குச்சந்தை நிறுவனம் இந்த ஆண்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் பவளவிழா 29-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு பவளவிழா நினைவுமலரை வெளியிடுகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
https://goo.gl/omwq1n


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்