tamilkurinji logo


 

செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம்,




செய்திகள் >>> தமிழகம்

செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம்

First Published : Sunday , 25th December 2011 11:45:56 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம்,

ஆபாச பட விவகாரத்தில் மாணவியை கொன்றதாக சித்தப்பா கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் +1 படிக்கும் இரண்டு மாணவிகளை, அதே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் செக்ஸ் சில்மிசம் செய்ததாகவும், அந்த சம்பவத்தை அந்த மாணவர்கள் படம் எடுத்து செல்போன் மற்றும் இணையதளத்தில் பரவ விட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனால் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, மாணவிகளிடம் செக்ஸ் சில்மிசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 5 மாணவர்களுக்கும் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கியது.

இதற்கிடையில் பாதிரிவேடு அரசுப்பள்ளியில் +1 படித்து வந்த செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்ற மாணவி கடந்த 21-ந் தேதி பிற்பகல் வீட்டில் உள்ள மின்விசிறியில் பிணமாக தூக்கில் தொங்கினார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை குமார் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், `எனது மகள் திலகவதி, படித்து வந்த அரசுப்பள்ளியில் +2 படிக்கும் 5 மாணவர்கள் எனது மகளிடம் தகாத முறையில் நடந்து அதனை படம் எடுத்து செல்போன் மற்றும் இணையதளத்தில் பரவ விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த என் மகள் திலகவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் சாவுக்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்' என்று கூறியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி திலகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் மாணவி திலகவதியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் சாவுக்கு காரணமான 5 மாணவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி உறவினர்களும், செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் மாதர்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள சத்தியவேடு கூட்டுச்சாலையில் நடுரோட்டில் பிணத்தை போட்டு திடீர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாதர்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் ஆகி மாணவியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில், பாதிரிவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக மாணவியின் சாவுக்கு காரணமாக கருதப்பட்ட 5 மாணவர்கள் மீதும் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இவர்களில் 3 மாணவர்களை கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் போலீசார் கைது செய்தனர். மற்ற 2 மாணவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

கைதான 3 மாணவர்களும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் போலீசார் அவர்களை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு (வெள்ளிக்கிழமை) பாதிரிவேடு அடுத்த செதில்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி ஜோதியிடம் இறந்துபோன மாணவி திலகவதியின் சித்தப்பா அரி (வயது37) நேரில் சென்று வாக்குமூலம் ஒன்றை அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கும் சுமித்ரா என்பவருக்கும் திருமணமாகி லோகேஷ், ஸ்ரீகாந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். செதில்பாக்கம் கிராமத்தில் எனது பெரியப்பா மகன் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குமாரின் மனைவியான பத்மாவிற்கும், எனக்கும் சுமார் 12 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

இந்தநிலையில், பத்மா தனது மகள் திலகவதியின் நிலை குறித்தும், பள்ளியில் மாணவர்களுடன் ஆபாசமாக இருந்தது குறித்தும் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். பத்மாவின் மனவேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதனால், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது காலை 10ë:30 மணியளவில் திலகவதியின் வீட்டிற்கு சென்றேன். அங்கு திலகவதி தனியாக இருந்தாள். நான் வீட்டிற்குள் சென்றதும் கதவை சாத்திக் கொண்டு, `உன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் தகாத உறவை வைத்துக்கொண்டு எங்கள் மானத்தை வாங்கி விட்டாயே' என கோபமாக பேசி பத்மாவின் ஆலோசனைப்படி கொலை செய்யும் நோக்கத்தோடு திலகவதியின் கண்ணத்தில் அறைந்தேன்.

உடனே திலகவதி மயங்கி கீழே விழுந்தாள். நான் அருகில் இருந்த புடவையால் அவளது கழுத்தை இறுக்கி வீட்டினுள் இருந்த மின்விசிறி தூக்கு மாட்டி கொலை செய்து விட்டேன்.

பின்னர் பயந்து ஆந்திர மாநிலம் சத்தியவேடுவிற்கு ஓடி விட்டேன். இந்த கொலை தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எப்படியும் நான் திலகவதியை கொலை செய்ததை போலீசார் விசாரித்து என்னையும் பிடித்து சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என்று தெரிந்து செதில்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை வாக்கு மூலமாக அளிக்கிறேன்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதியின் சித்தப்பா அரி கூறியுள்ளார்.

இதனையடுத்து பாதிரிவேடு போலீசார் மாணவி திலகவதியின் சித்தப்பா அரியை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அங்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம், செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம், செல்போனில் பரவிய பள்ளி மாணவியின் ஆபாசபட வழக்கில் திடீர் திருப்பம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னையில் 7- வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பலி
சென்னை சூளைமேட்டில் தாயின் அஜாக்கிரதை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை பலியானது.சென்னை சூளைமேட்டில் சித்ரா அவென்யூவில் மஞ்சு பிளாட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 6 அடுக்குகளும், 7- வதாக

மேலும்...

 தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்
திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா

மேலும்...

 சேலம்-சென்னை ரெயில் ரூ.5.75 கோடி கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது.
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம,் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், நாசா சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி

மேலும்...

 மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in