tamilkurinji logo


 

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை,




செய்திகள் >>> தமிழகம்

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை

First Published : Thursday , 29th December 2011 08:56:28 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை,

மதுராந்தகம் அருகே செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்தார். இது தொடர்பாக வாலிபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுராந்தகத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் மரியதாஸ். இவருடைய மகள் தீபிகா (வயது 15). காந்தி நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து தீபிகாவின் தந்தை மரியதாஸ் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், எனது உறவினர் வித்யாசாகருக்கும் வீட்டுமனை பிரச்சினை இருந்து வந்தது.

இந்த பிரச்சினையில் என்னை பணிய வைப்பதற்காக வித்யாசாகரின் நண்பர்களான இதே ஊரை சேர்ந்த 2 மாணவர்கள் என்னுடைய மகள் தீபிகாவிடம் செல்போனை காண்பித்து நீ குளிக்கும் போது போட்டோ எடுத்து வைத்துள்ளோம். அது எங்கள் செல்போனில் உள்ளது. இதை ஊர் முழுவதும் போட்டுக்காட்டுவதுடன் இன்டர்நெட்டிலும் போடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த என்னுடைய மகள் தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

புகாரை பதிவு செய்த மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ஆர்.சேகர், சப்-இன்ஸ்பெக்டர் எம்.பரந்தாமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த 2 மாணவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை, செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை, செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம்

மேலும்...

 எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.பண்ணாரி அம்மன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in