tamilkurinji logo


 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்?,




செய்திகள் >>> இந்தியா

ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்?

First Published : Sunday , 21st February 2010 07:26:39 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM



சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவர் டபிள்யூ. ஆர்.வரதராஜன் குடும்பப் பிரச்சனை காரணமாக மாயமாகிவிட்டார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீரென மாயமாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 ஆண்டுகளாக தனியே வசித்து வந்த பெர்னாண்டசுக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஞாபக மறதி நோயும் (Alzheimer's disease) தாக்கியுள்ளது. இதனால் தன்னைச் சுற்றி நடப்பதை அவர் அறியாத நிலையில் உள்ளார்.

இவரது மனைவி லீலா. இவர்களது மகன் சீன். இவர்கள் பெர்னாண்டஸைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர்.

இந் நிலையில் பெர்னாண்டசில் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் லீலாவும், சீன் பெர்னாண்டசும் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.

அதுவரை பெர்னாண்டஸை கவனித்து வந்த அவரது உறவினர்கள், சில உதவியாளர்களை அவர்கள் விரட்டியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடைசி காலத்தில் பெர்னாண்டசின் ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரிக்கவே அவர்கள் வந்துள்ளதாக புகார் எழுந்தது. ஆனால், பெர்னாண்டசின் நண்பர்களும் உறவினர்களும் தான் சொத்தை கைப்பற்ற முயல்வதாக லீலா புகார் கூறி வந்தார். மேலும் அவர்கள் தனது கணவரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் பெர்னாண்டஸ் திடீரென மாயமாகியுள்ளார். அவரது டெல்லி வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெர்னாண்டசின் சகோதரர் மைக்கேல் கூறுகையில், நாங்கள் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தோம். அதற்குள் அவரது மனைவி லீலா அவரை எங்கேயோ கடத்திச் சென்று விட்டார். இதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர உள்ளோம். எங்களுக்கு அவரது சொத்து எல்லாம தேவையில்லை. அவருக்கு நல்ல சிகிச்சை கிடைத்தால் போதும். அவரை சந்திக்க அனுமதித்தால் போதும் என்றார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்?, ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்?, ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in