டீசல் நானோ கார் விரைவில் அறிமுகம்

டீசல் நானோ கார் விரைவில் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் விற்பனை தொடர்ந்து சரிவை தடுத்தி நிறுத்த புதிய திட்டங்களுடன் டாடா களமிறங்குகிறது.

இந்த நிலையில், 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் கார்ல் ஸ்லிம் கூறியிருக்கிறார். அந்த 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களில் ஒன்று புதிய நானோ என்று தகவல்கள் கூறுகின்றன.

வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் புதிய நானோ காரை இந்த மாதம் விற்பனைக்கு விடுவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜியில் இயங்கும் நானோவையும், டீசல் நானோவையும் அடுத்தடுத்து களமிறக்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் விற்பனைக்கு வருவதாக கூறப்படும் புதுப்பொலிவுடன் கூடிய நானோ காரில், மறுவடிவமைப்பு பெற்ற பின்பக்க பம்பர் மற்றும் குரோம் பூச்சுகள், புதிய வீல் கவர் ஆகியவற்றுடன் புதிய நீல நிறத்திலும் நானோ வருகிறதாம்.

எஞ்சினில் மாற்றம் இருக்காது. இதுதவிர, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட இன்டிகோ இசிஎஸ் செடான் காரையும் விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருப்பதும் தெரியவந்துள்ளது.
https://goo.gl/4HL9oi


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்