டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார்.

தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர் ஆனார்.

அவர் காலை 10.30 மணி அளவில் தலைமை தேர்தல் கமிஷனில் ஆஜராகி கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளார்.  அதன்பின்னர் அவர், மதியம் 12 மணி அளவில் வெளியே வந்தார்.


 பின்னர் மாலையில் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

இந்த நிலையில், சோனியா காந்தியை இன்று காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேச உள்ளார் என தகவல் வெளியானது.  அதன்படி அவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  அவரது உடல் நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பயணத்தினை தொடங்கிய பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல் அமைச்சராக பதவியேற்ற எச்.டி. குமாரசாமியை நேரில் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.  தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 


அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடந்தது.  தமிழக அரசியல் சூழல் பற்றி பேசினேன்.  மக்களவை தேர்தல் பற்றி தற்பொழுது பேசவில்லை.  ஆனால் பேசலாம் என கூறியுள்ளார்.
https://goo.gl/9x7mmP


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை