டோக்லாம் எல்லையில் எதையும் சந்திக்க தயார்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

டோக்லாம் எல்லையில் எதையும் சந்திக்க தயார்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி
டோக்லாம் எல்லையில் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் அருகேயுள்ள டோக்லாம் பகுதி, யாருக்குச் சொந்தம் என இந்தியாவிற்கும்  சீனாவிற்குமிடையே சர்ச்சை நிலவிவருகிறது.

 கடந்த ஆண்டு  ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம்  சாலை அமைத்து அவர்களது ராணுவ முகாம்களை அமைக்க பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கு இந்தியா ராணுவம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் டோக்லாம் எல்லையில் பதட்டம் உண்டானது.

இதனையொட்டி  இரு நாடுகளும்  படைகளைக் குவித்ததால், போர் பதற்றம் உருவானது. அதன் பிறகு இது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி 73 நாள்களுக்குப் பிறகு இரு நாடுகளும் தங்களது படைகளை எல்லையிலிருந்து வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியினை  சீனா மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் தேசிய பாதுகாப்புத் துறை அகாடமிக்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  சந்தித்து  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது

எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. பிராந்திய அமைதியை நிலைநிறுத்துவதில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது.


 டோக்லாம் எல்லையில் எத்தகைய நெருக்கடியான சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.

டோக்லாம் பகுதியில் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தங்களுக்கு உரிமை இருப்பதாகச் சீனா கூறிவரும் நிலையில், அந்நாட்டுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/iAzsdc


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை