தங்கம் ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, திருமண சீசன் போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்னும் சில வாரங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகள் வர இருப்பதால், தங்கத்தின் தேவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவும் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

வெள்ளி விலையும் அதிரடி

சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.23 ஆயிரத்து 656-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுன் தங்கம், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.120 விலை உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 776-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 972-க்கு விற்பனையானது. தங்கத்தின் விஸ்வரூப விலையேற்றத்தை பார்க்கும்போது இன்னும் ஒருசில தினங்களில் தங்கம் ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை கடந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.61 ஆயிரத்து 890-க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, நேற்று ரூ.130 விலை உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
https://goo.gl/VPL48S






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்