தங்கம் கிடுகிடு விலை உயர்வு

தங்கம் கிடுகிடு விலை உயர்வு
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம், நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.45ம், சவரனுக்கு ரூ.360ம் அதிகரித்தது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்தே உள்நாட்டில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் விற்பனை விலை இருக்கிறது. 10 நாட்களுக்கு முன் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.22,992ஐ தொட்டது தங்கம். அதன்பிறகு கடந்த 5 நாட்களில் தொடர்ந்து சரிந்து ரூ.600 வரை குறைந்தது.

இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ஒரு சவரன் ரூ.22,776 ஆனது. இது சவரனுக்கு ரூ.360 அதிகம். கடந்த சில நாட்களாக விலை சரிந்ததால் தங்கம் விற்பனை அதிகரித்து தேவை உயர்ந்ததே விலை உயரக் காரணம் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர். 24 காரட் சுத்த தங்கம் 10 கிராம்  ரூ.30,450க்கு விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த வெள்ளி விலையும் நேற்று நாலு கால் பாய்ச்சலில் ஏறியது. கட்டி வெள்ளி ஒரு கிலோ நேற்று முன்தினம் விற்பனையான ரூ.52,795ல் இருந்து நேற்று ரூ.1,460 அதிகரித்து ரூ.54,255 ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.10 ஆக இருந்தது.
https://goo.gl/WXqt2u


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்