tamilkurinji logo


 

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு,Gold price

Gold,price




தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

First Published : Friday , 24th August 2012 07:30:53 PM
Last Updated : Friday , 24th August 2012 07:30:53 PM


தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு,Gold price

வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்தை தாண்டியது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்தநிலையில் திருமண சீசன் தொடங்கிதையெடுத்து, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் தொடர்ந்து ஏறி வருகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நேற்று பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.22 ஆயிரத்து 936-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுன் தங்கம், நேற்று ஒரே நாளில் ரூ.304 விலை உயர்ந்து, ரூ.23 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ரூ.56 ஆயிரத்து 125-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளி, நேற்று ஒரே நாளில் ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ரூ.58 ஆயிரத்து 125 -க்கு விற்பனை ஆனது.


தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு,Gold price தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு,Gold price தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு,Gold price
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in