tamilkurinji logo


 

தங்கம் வாங்காதீங்க...,




தங்கம் வாங்காதீங்க...

First Published : Sunday , 22nd July 2012 06:37:03 PM
Last Updated : Sunday , 22nd July 2012 06:37:03 PM


தங்கம் வாங்காதீங்க...,

நாட்டின் பொருளாதாரம் முன்னேறுவதற்கு மக்கள் தங்கத்தின் மீதான மோகத்தை விடவேண்டும். பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி அறிவுரை கூறுகிறார். ரிசர்வ் வங்கியின் வாராந்திர கூட்டத்தில் துணை கவர்னர் சக்கரவர்த்தி பேசியதாவது: நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2% ஆக அதிகரித்துள்ளது. 1991ல் பொருளாதார பின்னடைவு காலத்தில் கூட 3% ஆகவே இருந்தது. இதற்கு காரணம், நமது இறக்குமதி செலவு அதிகரித்து, ஏற்றுமதி வருவாய் குறைந்ததுதான்.

 தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத்தான் நாம் அதிகமாக செலவிடுகிறோம். உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரப்படி, 2011,2012 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செலவு 6000 கோடி டாலராக(969டன்) உயர்ந்துள்ளது. அரசு புள்ளி விவரப்படி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 15,560 கோடி டாலராக உள்ளது.  எனவே, இந்த இரண்டின் இறக்குமதியையும் குறைத்து விட்டால் நமது பொருளாதார பிரச்னை தீர்ந்து விடும். இறக்குமதி தங்கம் அவ்வளவும் நகைக்காகவோ, கோயில் காணிக்கையாகவோ போகிறது.

இன்னும் ஏன் பழங்கால வழக்கப்படி தங்கத்தின் மீது மக்கள் மோகம் கொண்டிருக்கிறார்கள்? இதிலிருந்து மக்கள் மனநிலை மாற வேண்டும். அதே போல், மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் சைக்கிளில் போனால் வசதி, உடம்புக்கும் நல்லது என்று பிரபலப்படுத்த வேண்டும். தங்கத்தை விட்டு வேறு வகைகளில் சேமியுங்கள். பெட்ரோல் பயன்பாட்டை குறையுங்கள். நாட்டின் பொருளாதாரம் முன்னேறி விடும். இவ்வாறு சக்கரவர்த்தி பேசினார்.

தங்கம் வாங்காதீங்க..., தங்கம் வாங்காதீங்க..., தங்கம் வாங்காதீங்க...,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத சரிவு
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. விலை ஏறி, இறங்கி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 288 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.248 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in