தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு
சென்னையில் நேற்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.8ம், சவரனுக்கு ரூ.64ம் அதிகரித்து ரூ.20,232க்கு விற்பனையானது.

கடும் நிதிநெருக்கடி காரணமாக சைப்ரஸ் நாட்டில் இருப்பு தங்கத்தை விற்றனர். இதே போல், பல நாடுகளில் தங்கம் விற்கப்பட்டதால், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தேவைக்கு அதிகமாக தங்கம் வரத்து இருந்தது. இதனால், விலை மளமளவென சரிந்தது. இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் விலை குறைந்தது.

சென்னையில் கடந்த 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தங்கம் விலை படிப்படியாக குறைந்து, 17ம் தேதி ஒரு சவரன் ரூ.19,400 ஆக இருந்தது.

இது கடந்த 20 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். பின்னர், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறிது சிறிதாக உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.2,529 ஆகவும், சவரன் ரூ.20,232 ஆகவும் விற்பனையானது.

சுத்த தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.27,050 ஆக இருந்தது. வெள்ளி விலை நேற்று குறைந்தது. கிராமுக்கு 90 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.47.10 ஆனது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.44,050 க்கு விற்பனையானது.
https://goo.gl/XwUxQd






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்