tamilkurinji logo


 

தங்கம் விலை கடும் உயர்வு,Gold rate

Gold,rate




தங்கம் விலை கடும் உயர்வு

First Published : Tuesday , 19th June 2012 06:26:31 PM
Last Updated : Tuesday , 19th June 2012 06:26:31 PM


தங்கம் விலை கடும் உயர்வு,Gold rate

தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது.

கடந்த 2009-ம் ஆண்டு ஒருபவுன் தங்கம் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையானது. அப்போது அப்பாடா தங்கம் ரூ.10ஆயிரத்திற்கு உயர்ந்துவிட்டதே என்று தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

இருப்பினும் விஷம் போல தங்கத்தின் விலை நாளும் ஏறியபடித்தான் இருந்தது. 2010-ம்ஆண்டில் ஒரு பவுன் ரூ.12ஆயிரத்து 784க்கு விற்பனையானது. அதே ஆண்டில் ரூ.16 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஆண்டு ஆகஸ்டுமாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.20ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒருபவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது.

ஜுன் 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 728 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில நேற்று ஒருபவுன் ரூ.22 ஆயிரத்து 976க்கு விற்கப்பட்டது. அதாவது ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது.

நேற்று காலையில் ஒரு கிராம் ரூ.2ஆயிரத்து 870-க்கும் மாலையில் ரூ.2 ஆயிரத்து 872க்கும் விற்கப்பட்டது. அதாவது ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976-க்கு விற்பனையானது.

கடந்த 40 நாட்களில் மட்டும் பவுனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

வருடத்திற்கு ரூ.5ஆயிரம் வீதம் உயர்ந்தால் இன்னும் 5 வருடத்தில் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

உலகச்சந்தையில் கச்சாஎண்ணை விலை வீழ்ச்சி அடைந்ததாலும் தங்கத்தின் மீது ஏராளமானவர்கள் முதலீடு செய்வதாலும் இப்படி தங்கத்தின் விலை உயர்கிறது என்று நகைக்கடை அதிபர் தெரிவித்தார்.

தங்கம் விலை கடும் உயர்வு,Gold rate தங்கம் விலை கடும் உயர்வு,Gold rate தங்கம் விலை கடும் உயர்வு,Gold rate
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in