tamilkurinji logo


 

தங்கம் விலை கடும் உயர்வு,gold price

gold,price




தங்கம் விலை கடும் உயர்வு

First Published : Saturday , 1st September 2012 07:09:11 PM
Last Updated : Saturday , 1st September 2012 07:09:11 PM


தங்கம் விலை கடும் உயர்வு,gold price

தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. சென்னையில் நேற்று தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 அதிகரித்து உள்ளது. தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.23 ஆயிரத்து 192 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுன் தங்கம், நேற்று ஒரே நாளில் திடீரென்று அதிரடியாக ரூ.424 விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 616 க்கு விற்பனையானது.

தங்கத்தின் தேவை அதிகரிப்பு, திருமண சீசன், விழா காலங்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இன்னும் ஒரு சில நாட்களில் ரூ. 24 ஆயிரத்தை கடந்து விடும் என்றே தெரிகிறது.

தங்கத்திற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல வெள்ளி விலையும் நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து வந்தது. தற்போது வரலாறு காணாத வகையில் வெள்ளி கிலோ ரூ.60 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.58 ஆயிரத்து 510 க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் அதிரடியாக கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 465 விலை உயர்ந்து, ரூ.60 ஆயிரத்து 975 க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலையை போன்றே வெள்ளியின் விலையும் வரலாற்று சாதனை படைத்து வருகிறது.


தங்கம் விலை கடும் உயர்வு,gold price தங்கம் விலை கடும் உயர்வு,gold price தங்கம் விலை கடும் உயர்வு,gold price
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in