tamilkurinji logo


 

தங்கம் விலை கடும் சரிவு,Gold price

Gold,price




தங்கம் விலை கடும் சரிவு

First Published : Thursday , 29th November 2012 07:17:57 PM
Last Updated : Thursday , 29th November 2012 07:17:57 PM


தங்கம் விலை கடும் சரிவு,Gold price

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 சரிந்தது. ஆபரண தங்கம் கிராம் ரூ.2977 ஆகவும், சவரன் ரூ.23,816 ஆகவும் இருந்தது.   தங்கம் விலை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று சவரன் ரூ.24 ஆயிரத்தை தொட்டது. அதன்பின், விலை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து, அக்டோபரில் ரூ.23 ஆயிரத்துக்கு இறங்கியது. இதனால், தீபாவளிக்கு விற்பனை சூடுபிடித்தது. தீபாவளி முடிந்ததும் மீண்டும் விலை உயர்ந்தது. படிப்படியாக விலை அதிகரித்து கடந்த வாரம் ரூ.24 ஆயிரத்தை தொட்டது. அடுத்த 2 நாட்களில் சவரன் ரூ.24,544 ஆனது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விற்பனை தொடர்ந்து குறைந்ததால் விலை சரிந்தது. இதன் எதிரொலியாக கடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. மேலும், தீபாவளி முடிந்ததும் விற்பனையும் குறைந்தது. இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனையை கருத்தில் கொண்டு வியாபாரிகள் விலையை குறைத்துள்ளனர்.

நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.24,296 ஆக இருந்தது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.23,816 ஆனது. இம்மாத இறுதி வரை இதே நிலை நீடிக்கலாம் என்றும், அதிக அளவில் விலை உயர வாய்ப்பில்லை என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர். வெள்ளியும் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1005 குறைந்து ரூ.64,095 ஆனது. கிராம் ரூ.68.60 ஆக இருந்தது.

தங்கம் விலை கடும் சரிவு,Gold price தங்கம் விலை கடும் சரிவு,Gold price தங்கம் விலை கடும் சரிவு,Gold price
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி
நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in