தங்கம் விலை கடும் சரிவு

தங்கம் விலை கடும் சரிவு
தங்கம் பவுனுக்கு ரூ.376 விலை குறைந்து, நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 944–க்கு விற்பனையானது. வெள்ளி விலையிலும் இறங்கு முகம் காணப்படுகிறது.

தங்கத்தின் விலையில் கடந்த சில வருடங்களாக நிலையற்ற தன்மை காணப்பட்டு வருகிறது. திடீரென விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.2 ஆயிரத்து 790–க்கும், ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 320–க்கும், விற்பனையான தங்கம், நேற்று கிராமிற்கு ரூ.47–ம், பவுனுக்கு ரூ.376–ம் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 743–க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 944–க்கும் விற்பனையானது.

கடந்த 11–ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 912–க்கு விற்பனையானது. எனவே கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.968 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை குறைந்து வருவது குறித்து நகை வியாபாரிகளிடம் கேட்டபோது, தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதே காரணம் என்று வழக்கமான பதிலையே அளித்தனர்.

தங்கத்தின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை குறைவு எதிரொலியாக நகைக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையிலும் சரிவு நிலவி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ரூ.593–க்கு விற்பனையான 10 கிராம் வெள்ளி நேற்று ரூ.17 விலை குறைந்து ரூ.576–க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.55 ஆயிரத்து 450–க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி நேற்று கிலோவுக்கு ரூ.1610 விலை குறைந்து ரூ.53 ஆயிரத்து 840–க்கு விற்பனை செய்யப்பட்டது.
https://goo.gl/4Wv2wx


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்