தங்கம் விலை தொடர் சரிவு

தங்கம் விலை தொடர் சரிவு
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. ஒரு பவுன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று வியாபாரிகள் கூறினார்கள். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மார்கழி மாதம் பிறந்தது. பொதுவாக மார்கழி மாதத்தில் திருமணம் வைப்பதில்லை. இதன் காரணமாக மார்கழி மாதத்தில் தங்கத்தின் தேவைப்பாடு குறைவதால், தங்கத்தின் விலை குறைவாகவே இருக்கும். இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும், திடீரென இறங்குவதுமாக இருந்துவருகிறது.

கடந்த 17-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 911 ரூபாயாகவும், ஒரு பவுன் 23 ஆயிரத்து288 ரூபாயாகவும் இருந்தது. 18-ந் தேதி கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து ரூ.2939 ஆகவும், ஒரு பவுன் 23 ஆயிரத்து 512 ரூபாயாகவும் இருந்தது.

இதற்கிடையே, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.504 குறைந்து ஒரு பவுன் 23 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் ரூ.504 என அதிரடியாக குறைந்ததால், நகைக்கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் நகை வாங்கிச்சென்றதைக்காணமுடிந்தது. இந்த விலை சரிவு தொடர்ந்து நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


இதேபோல், வெள்ளியின் விலையிலும் நேற்று வீழ்ச்சி காணப்பட்டது. 18-ந்தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.66 எனவும், ஒரு கிலோ 61 ஆயிரத்து 685 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ஆயிரத்து 905 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 59 ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

https://goo.gl/GKT7L6


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்