தங்கம் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்தது
தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.384 குறைந்து, கிராம் ரூ.2,733-க்கும், பவுன் ரூ.21,864-க்கும் விற்பனையானது.

உலகிலேயே இந்திய மக்களிடம் தான் தங்கத்தின் மீதான மோகம் அதிகளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவிதத்திலிருந்து 6 சதவிதமாக உயர்த்தி கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை நோக்கி பயணித்தது. அப்போது இனி தங்கத்தின் விலை குறைவதற்கு சாத்தியமில்லை என்ற குரலும் ஓங்கி ஒலித்தது. இது நடுத்தர இல்லத்தரசிகளை கதி கலங்க செய்தது.

அமெரிக்க பொருளாதார சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, தங்கம் வைத்திருப்பவர்கள் அதனை விற்பனை செய்து பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கத்தின் தேவை குறைந்து, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக சரிவு நிலவி வருகிறது.

இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்ற யூகத்தினை சிதறடிக்கும் வகையில் இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.2 ஆயிரத்து 781-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 248-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.48-ம், பவுனுக்கு ரூ.384-ம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 733-க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 864-க்கும் விற்பனையானது. கடந்த 10 நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராமுக்கு ரூ.68-ம், பவுனுக்கு ரூ.544 வரை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையிலும் சரிவு காணப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ரூ.563-க்கு விற்பனையான 10 கிராம் வெள்ளி நேற்று ரூ.16 விலை குறைந்து, 10 கிராம் வெள்ளி ரூ.547-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.51 ஆயிரத்து 95-க்கு விற்பனையானது.

https://goo.gl/bDN7Rs


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்