தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022

தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது: ஒரு கிராம் ரூ. 3022
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் உண்டாகிறது. சமீப காலமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தபடி உள்ளது.
 
தற்போது பண்டிகை மற்றும் திருமண சீசன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
 
நேற்று முன்தினம் சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது. எனவே தங்கம் விலை நேற்று ரூ. 24 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. பவுனுக்கு ரூ. 256 குறைந்ததால், நேற்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23,648 ஆக விற்பனை ஆனது.
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயருமா? அல்லது குறையுமா? என்று நகைக் கடைக்காரர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை மிக கடுமையாக அதிரடியாக உயர்ந்தது.
 
நேற்று ஒரு கிராம் ரூ. 2956-க்கு விற்ற தங்கம் ரூ. 66 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ. 3022 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 66 உயர்ந்த காரணத்தால் இன்று ஒரு பவுனுக்கு ரூ. 528 அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை நகைக்கடைகளில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது.
 
இந்த சீசனில் இன்றுதான் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த காலத்து முதியவர்களோ, தங்கம் விலை மிரட்டுவதாக உள்ளது என்கிறார்கள்.
 
தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்தது. இன்று பார் சில்வர் ரூ. 2735 உயர்ந்து ரூ. 64,505 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 69 ஆக விற்பனை ஆகிறது.
https://goo.gl/aFLGd3


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்