தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்

தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்
தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 100 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நூறாவது நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போராட்டக்காரர்கள் முயன்றனர்.


பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் கலைத்தனர். ஆனால், மக்கள் அதற்கும் அசராமல் போகவே, ஒருகட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


இதில், வெனிஸ்டா, அந்தோனி, கிளாஸ்டன், வினிதா, ஜெயராம், மணிராஜ், சண்முகம், தமிழரசன், கந்தய்யா உள்ளிட்ட 9 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ''தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் 11 பேர் பலியான தகவல் அறிந்து நான் துயரம் அடைகிறேன்.

அவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

ஆனால், ஆளுநர் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
https://goo.gl/1hEeMF


03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது