தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது

2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும்.


மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும்  என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன.

கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. இறுதியில் மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம்  முடிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியது.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. தென்மாவட்டங்களை இணைக்கும் மதுரையில் மருத்துவமனை அமைக்கப்பட்டால் கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள மாவட்டங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதும் மதுரைதான். அதனால், மதுரையில் மருத்துவமனை அமைந்தால்தான் மக்களுக்கு வசதியாக இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு கட்சியினரும் குரல்கொடுத்து வந்தனர். எப்படியும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இப்போது அதற்கு சாதகமான தகவல் வெளியாகியுள்ளது.
 
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் விவகாரத்தில் மதுரை தோப்பூர் முன்னிலைப் பெற்றுள்ளது. மத்திய சுகாதாரத்துறை தகவல்களும் இதனையே உறுதிசெய்கிறது. டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் இடையே  அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது எனவும் அத்தகவல்கள் குறிப்பிடுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
https://goo.gl/jtSnLk






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது