tamilkurinji logo


 

தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்,




செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்

First Published : Wednesday , 28th December 2011 08:21:55 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்,

வங்கக்கடலில் உருவான `தானே' புயல் தீவிரம் அடைந்து தமிழகத்தை நெருங்குகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) இரவு முதல் தமிழ்நாட்டில் மழைபெய்ய தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அந்த புயலுக்கு தானே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தானே புயல் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து 30-ந்தேதி காலை வடதமிழகத்திற்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையே அதாவது கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும்.

தானே புயல் காரணமாக இன்று (புதன்கிழமை) இரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைபெய்ய தொடங்கும். குறிப்பாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

29-ந்தேதி மழை எந்த அளவுக்கு பெய்யும் என்பது இன்று இரவு துல்லியமாக தெரியும்.

புயல் காரணமாக, கடல் கொந்தளிப்பாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

கடல் சீற்றத்தால் எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்டவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதில் காசி விசாலாட்சி குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, கவாஸ்கர் ஆகியோரின் படகுகள் காணாமல் போனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலூரில் திங்கள்கிழமை இரவு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 20 அடி உயரம் வரை எழுந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள தேவனாம்பட்டினம், சில்வர் பீச், தாழங்குடா ஆகிய பகுதிகளில் 200 மீட்டர் வரை கடல் நீர் உள்ளே புகுந்தது. இதனால் சில்வர் பீச் சிறுவர் விளையாட்டுப் பூங்கா நீரில் மூழ்கியது.

அப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 260 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புயல் காரணமாக கனமழை உள்ளிட்ட எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் சமாளிக்க வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல், தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல், தமிழகத்தை மிரட்டும் `தானே' புயல்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in