தலித் பாஜக எம்.பி.யைத் தூக்கி வெளியே எறிந்த யோகி ஆதித்யநாத்

தலித் பாஜக எம்.பி.யைத் தூக்கி வெளியே எறிந்த யோகி ஆதித்யநாத்
உ.பி.மாநிலத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி எம்.பி.சோட்டே லால் கர்வார் தன்னை முதல்வர் யோகி ஆதித்யநாத் தூக்கி வெளியே எறிந்தார் என்று பகீர் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது உ.பி.அரசியலில் பரபரப்பாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நாடு முழுதும் தலித் போராட்டங்கள் போர்க்களமாக எழுச்சி பெற 10 பேர் பலியானதையடுத்து கடும் சர்ச்சை எழும்பியுள்ள நிலையில் தலித் எம்.பி. சோட்டேலால் கர்வார் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி பிரதமரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இவர் இருமுறை சந்தித்ததாகவும் இருமுறையும் இவரை கன்னாபின்னாவென்று திட்டி வெளியே தூக்கி எறிந்ததாகவுஜ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்/

தன் தொகுதியிலேயே தன்னிடம் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும் தன் புகார்கள் எதையும் நிர்வாகம் மதிப்பதில்லி என்றும், தன் கட்சிக்காரர்களே தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் இதற்கெல்லாம் தான் தலித் என்பதுதான் காரணம் என்றும் அவர் கூறி யோகியை சந்தித்துள்ளார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இவரை அலட்சியம் செய்துள்ளதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

பிரதமருக்கு இவர் புகார் கடிதம் எழுதியுள்ளதோடு தாழ்த்தப்பட்ட சாதிக்கான தேசிய கமிஷனையும் அவர் நாடியுள்ளார்.

“எனக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி நான் பலமுறை கதவைத் தட்டிவிட்டேன், ஒருவரும் செவிசாய்க்கவில்லை அதனால்தான் தேசிய தாழ்த்தப்பட்ட சாதி ஆணையத்தை நாடினேன். உள்ளூர் மட்டத்தில் என்னைப் பற்றி விசாரியுங்கள் நான் ஏதாவது தவறு செய்திருக்கிறேனா என்று பின் ஏன் என்னை மட்டும் இப்படி நடத்த வேண்டும்?” என்று இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட நிர்வாகத்திலும், வனத்துறையிலும் 3 ஆண்டுகளாக கடும் ஊழல்கள் நடைபெறுவதாக இவர் பிரதமருக்கான தன் புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார். யோகி ஆதித்ய்நாத் பதவி ஏற்றபிறகு நிலைமை சீரடையும் என்று எதிர்பார்த்துள்ளார்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை மாறாக இவரது நிலத்தையே வனத்துறை நிலம் என்றும் அதனை இவர் ஆக்ரமித்துள்ளார் என்றும் எதிர் குற்றம் சுமத்தப்பட்டதாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இவருக்கும் இவரது சகோதரருக்கும் எதிராக வேலை செய்கின்றனர் என்ற புகாரையும் அவர் தன் கடிதத்தில் எழுப்பியுள்ளார்.
https://goo.gl/iZdCni


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை