திடீரென 900 புள்ளிகள் சரிந்ததால் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் 15 நிமிடம் நிறுத்திவைப்பு

திடீரென 900 புள்ளிகள் சரிந்ததால் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் 15 நிமிடம் நிறுத்திவைப்பு
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகத்தின் இடையே பங்கு வியாபாரம் 15 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டது.

வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் 900 புள்ளிகளை இழந்தது. இந்த குழப்பம் குறித்து `செபி' விசாரணையை தொடங்கி உள்ளது.

இதில், தொழில்நுட்ப கோளாறு எதுவும் ஏற்படவில்லை எனவும், எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற பங்கு வர்த்தக தரகு நிறுவனம், ஒரு நிதி நிறுவனம் சார்பில் மொத்தம் ரூ.650 கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்வதற்காக 59 தவறான ஆர்டர்களை வழங்கியதே இதற்கு காரணமாகும் என தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் இயல்புக்கு மாற்றமாக வினோதமான முறையில் பல நிறுவனங்களின் பங்குகளுக்கு மிகக் குறைந்த விலையை குறிப்பிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்கின் விலை 10 சதவீதம் குறைந்தது.

பங்கு வர்த்தகத்தை 15 நிமிடம் நிறுத்திய பிறகு இயல்பு நிலை திரும்பியதால் வர்த்தகம் முடியும்போது இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 41 புள்ளிகளை மட்டும் இழந்தது.
https://goo.gl/26wfcW


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்